'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படம் பீனிக்ஸ் வீழான். ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன், வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். டீசரை பார்க்கும்போது, பாக்ஸர் ஆன சூர்யா ஏதோ ஒரு விஷயத்திற்காக சிறை செல்கிறார். அங்கு அரசியல் புள்ளி ஒருவர், அடியாட்களை அனுப்பி சிறையில் இருக்கும் சூர்யாவை கொலை செய்ய முயற்சிக்கிறார். அவர்களிடமிருந்து அவர் தன்னை காப்பாற்ற முயற்சிப்பது மாதிரியான கதையாக இருக்கும் என தெரிகிறது.