கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திடீரென்று படப்பிடிப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாகவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கினார் அஜித்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட்கள் எதையும் அப்படக் குழு வெளியிடாமல் இருந்து வரும் நிலையில், தற்போது அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அர்ஜூன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இந்த மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்குகிறது. இன்னும் 20 முதல் 30 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே நடைபெற வேண்டியுள்ளது. அதனால் தீபாவளிக்கு விடாமுயற்சி படம் திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளது என்கிறார் அர்ஜூன்.