பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் |
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு படத்திலிருந்து கவனிக்கப்படும் காமெடியனாக வலம் வந்த நடிகர் சூரி, ‛விடுதலை' படத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். அப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கருடன் படம் கடந்த 31ஆம் தேதி திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. இப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்திய அளவில் ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக நடித்து 50 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சூரியின் ஹீரோ மார்க்கெட்டில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.