'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி |
மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். கடந்த இரண்டு வருடங்களாகவே 'மாளிகைப்புரம், மேப்படியான், மார்கோ' மற்றும் தமிழில் 'கருடன்' என தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாறி நல்ல வசூலையும் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உன்னி முகுந்தனின் மேலாளர் விபின் குமார் என்பவர் உன்னி முகுந்தன் தன்னை அவதூறாக பேசியதாகவும் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து உன்னி முகுந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உன்னி முகுந்தனும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டார் என விபின் குமார் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதில் உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாக அவரது மேலாளர் விபின்குமார் கூறுவதில் எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை, அது மட்டும் அல்ல உன்னி முகுந்தன் அவரை தாக்குவது போன்று சிசிடிவியில் எந்தவித காட்சிகளும் பதிவாகவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.