நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தங்க மீன்கள் , குற்றம் கடிதல், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, தரமணி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஜே. சதீஷ் குமார். 'தரமணி' படத்தில் நடிகராக அறிமுகமாகி, கபடதாரி, பிரெண்ட்ஷிப், அநீதி, வாழை உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்தநிலையில் அவர் இயக்குனராக மாறி இயக்கிய 'பயர் 'என்ற படம் கடந்த பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்தின் 50வது நாள் விழாவை .சதீஷ் குமார் கொண்டாடினார். விழாவில் இயக்குனர் ராம் கலந்து கொண்டு படத்தில் பணியாற்றியவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
சதீஷ்குமார் கூறும்போது "இந்த ஆண்டு சுமார் 80 படங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் 'டிராகன்', 'குடும்பஸ்தன்' உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களே லாபத்தை ஈட்டியுள்ளன. 'பயர்' வெற்றியை ஈட்டியுள்ளது கதையையும் திறமைகளையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஊட்டி உள்ளது. நல்ல உள்ளடக்கத்தை தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஏற்பார்கள் என்பதற்கு 'பயர்' வெற்றியே சாட்சி. தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து, இயக்குவதோடு மட்டுமில்லாமல், சவாலான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.