சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், சாம் வொர்த்திங்டன், ஸோ சல்டானா, சிகொர்னி வீவர், ஸ்டீபன் லாங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அவதார் - பயர் அன்ட் ஆஷ்'. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் இந்தியாவில் வெளியாக உள்ளது. அந்த மொழிகள் அனைத்திலும் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். அற்புதமான விஎப்எக்ஸ் காட்சிகளுடன் டிரைலர் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
2009ம் ஆண்டில் 'அவதார்' வரிசையின் முதல் படம் வெளிவந்தது. சுமார் 3 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலை அந்தப் படம் குவித்தது. அதற்கடுத்து 2022ல் 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம் வெளிவந்தது. ஆனால், இப்படம் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்கவில்லை. இந்த வருட டிசம்பர் 19ம் தேதி 'அவதார் - பயர் அன்ட் ஆஷ்' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து 'அவதார் 4' படம் 2029ம் ஆண்டிலும், 'அவதார் 5' படம் 2031ம் ஆண்டிலும் வெளியாக உள்ளன.
'அவதார் பயர் அன்ட் ஆஷ்' படத்தின் படப்பிடிப்பு 2017ம் ஆண்டு நியுசிலாந்து நாட்டில் ஆரம்பமானது. 2020ம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்தது. அதற்கடுத்து கடந்த ஐந்து வருடங்களாக படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வந்தன.