‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் |
வாரந்தோறும் இல்லங்களை ஆக்கிரமிக்கும் ஓடிடி ரிலீஸ் படங்களில் வரிசையில், இந்த வாரம் கமெடி முதல் சீரியஸ் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. மூன்று நாள் விடுமுறையை குடும்பத்துடன் செலவிட முடியும். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களில் பட்டியலைத் தெரிந்து கொள்ளலாம்.
கான்ஸ்டபிள் கனகம்
நடிகை வர்ஷா கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள தெலுங்கு வெப் தொடர் ' 'கான்ஸ்டபிள் கனகம்'. கேரள வனப்பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவதைக் கண்டுபிடிக்கும் போது ஏற்படும் சவால்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான இந்த வெப் தொடர் ஈடி வின் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
குட் டே(Good Day)
நடிகர்கள் காளி வெங்கட், பகவதி பெருமாள், மைனா நந்தினி உள்ளிட்டோர் நடித்து, இயக்குநர் என்.அரவிந்தன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் 'குட் டே(Good Day)'. காவல்நிலையத்திற்கு வரும் குடிகாரன் சீருடை மற்றும் வாக்கி டாக்கியை திருடிச் சென்று விடுவான். அதை போலீசார் கண்டுபிடித்தாரா?, இல்லையா என்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை(ஆக.15ம்) வெளியாகவுள்ளது.
வியாசனசமேதம் பந்துமித்ராதிகள் (Vysanasametham Bandhumithradhikal)
மலையாள இயக்குநர் எஸ்.விபின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'வியாசனசமேதம் பந்துமித்ராதிகள்(Vysanasametham Bandhumithradhikal)'. கிராமம் ஒன்றில் இறப்பின் இறுதிச் சடங்கின் போது நடக்கும் கலாட்டாக்களை கதைக்களமாக்கியுள்ளனர் இயக்குநர். இந்த திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியது.
ஜே.எஸ்.கே(J.S.K - Janaki V v/s State of Kerala)
மலையாள நடிகர் சுரேஷ் கோபி, நடிகை அனுபமா, திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் நடிப்பிலும், இயக்குநர் பிரவீன் நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஜே.எஸ்.கே(J.S.K - Janaki V v/s State of Kerala)'. சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஜானகி நீதிக்காக எவ்வாறு போராடுகிறாள் என்பது போலக் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நாளை(ஆக.15ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.