புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ராமாயணத்தை தழுவி இந்திய சினிமாவில் நிறைய படங்கள் வந்துள்ளன. இப்போது பிரமாண்ட பட்ஜெட்டில் ‛ராமாயணா' என்ற படம் தயாராகி வருகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதாவாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷூம், லட்சுமணனாக ரவி துபேயும், ஹனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர். நிதிஷ் திவாரி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர்(ஹாலிவுட்) ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ராமாயணா படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். 3 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் யார் யார் நடிக்கிறார்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்புடன் ராமராக வரும் ரன்பீர் மற்றும் ராவணனாக வரும் யஷ் ஆகியோரின் முகம் சரியாக தெரியாத அளவுக்கு சில வினாடிகள் வந்து செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அறிமுக வீடியோ பார்க்க பிரமாண்டமாய் உள்ளது. மேலும் வீடியோவில் வரும் படத்தின் பின்னணி இசையும் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. இதுவே படம் மீதான ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
முழுக்க முழுக்க ஐ-மேக்ஸில் தயாராகி உள்ள இந்த படத்தின் விஎப்எக்ஸ் பணியை ஹாலிவுட்டை சேர்ந்த டிஎன்இஜி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் ராமர், ராவணன் நேருக்கும் நேர் மோதுவது போன்று உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.