விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
சமீபத்தில் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக கண்ணப்பா திரைப்படம் வெளியானது. நடிகர் விஷ்ணு மஞ்சு கதையின் நாயகனாக நடிக்க, மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் உள்ளிட்ட பிற மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முகேஷ் குமார் சிங் இயக்க, நடிகர் மோகன் பாபு தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஹிந்தி பதிப்பிற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஞ்சுவிடம் நீங்கள் ஏன் ஹிந்தி படங்களில் நடிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த விஷ்ணு மஞ்சு, “எனக்கு ஹிந்தி படத்தில் இருந்து பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை எல்லாமே நான் உற்சாகத்துடன் ஏற்கும் விதமான கதாபாத்திரங்களாக இல்லை. அது மட்டுமல்ல எனக்கென்று ஒரு சிறிய அளவில் இருக்கும் ரசிகர் வட்டத்தை நான் ஏமாற்றவும் விரும்பவில்லை. முக்கிய கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்புகிறேன். நடிகர் அஜித் குமார் கூட சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கானுடன் இணைந்து அசோகா என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனக்கே அது அதிர்ச்சியாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் இருந்தது.
ஒரு முறை அஜித்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவரிடம் அண்ணா நீங்கள் இப்படி சின்ன கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு ஏமாற்றம் தந்தது என்று கூறினேன். ஆனால் அவர் அதற்கு பதில் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் அமைதியாக இருந்து விட்டார். அவர் போல அவ்வளவு பெரிய மனதுடன் கிடைத்த கதாபாத்திரங்களில் நடிப்பது என்னால் முடியாது. அதையும் மீறி என்னை உற்சாகப்படுத்தும் கதையும் கதாபாத்திரங்களும் கிடைத்தால், நான் சுயநலமாக இருக்க மாட்டேன் இருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.