புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மின்னலே படம் துவங்கி தற்போது வரை மிக அதிக அளவிலான படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து, தனது இசைக்கு, பாடல்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டாரத்தையே பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல பரபரப்பாக அவர் இயங்கவில்லை என்றாலும் செலெக்ட்டிவ்வான படங்களுக்கு தற்போது அவர் இசையமைக்க வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கனடாவுக்கு சென்றிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் அங்கே டோரண்டோவில் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நடத்தினார். இதனை தொடர்ந்து கனடா அரசு அவருக்கு நினைவு பரிசு வழங்கி அவரை கவுரவித்து உள்ளது. இது குறித்த தகவலையும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.
கனடா அரசு வழங்கிய அந்த சான்றிதழில், “உங்களுடைய மறக்க முடியாத பாடல்களாலும் புதுவிதமான இசை பாணியினாலும் நீங்கள் தமிழ் இசையை உலக அளவில் சென்றடைய செய்திருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, பல புதிய இளம் தலைமுறை கலைஞர்கள் உருவாவதற்கும் தூண்டுதலாக இருந்திருக்கிறீர்கள். டோரண்டோவில் உங்களது வருகை என்பது இசையை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பெருமையான நிகழ்வும் கூட. நீங்கள் இந்த கலையின் மூலமாக ரசிகர்களுக்கு கொண்டுவந்து தந்த மகிழ்ச்சி, உணர்வு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.