கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் | சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு | கவுரி கிஷனுக்கு இதுவரை குரல் கொடுக்காத திரிஷா | 25வது நாளை கொண்டாடிய பைசன் | மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா | மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம் | கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா | பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல் | நடிகையானதை தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட விஸ்மாயா மோகன்லால் |

இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு கனடா நாட்டில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்', டொராண்டோ தமிழ் சங்கம் சார்பில் "குறள் இசையோன்" பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. பரத்வாஜ் இசையமைத்த காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ரோஜாக்கூட்டம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற பல படங்கள் ஹிட். எதற்காக இந்த படம் என்று விசாரித்தால் இவர் 1330 திருக்குறளை, 1330 பாடகர்களை பாட வைத்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில் உருவாக்கினார்.
கனடா நாட்டில் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்' பரத்வாஜ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, 1330 திருக்குறளையும் இசை வடிவில் கொடுத்த அவருக்கு பாராட்டு விழா நடத்தி, 'குறள் இசையோன்' பட்டத்தையும் வழங்கியது. கனடா அரசும் அந்த விழாவில் பரத்வாஜின் திருக்குறள் தமிழ் சேவையை பாராட்டி சர்டிபிகேட் கொடுத்து, கவுரவித்தது.
விழாவில் அந்த நாட்டில் உள்ள தமிழ் பாடகர்கள் பங்கேற்று பரத்வாஜ் இசையமைத்த திருக்குறள் பாடல்களை பாடி, தமிழ் ரசிகர்களை பரவசமடைய வைத்தனர். பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் மேடையில் திருக்குறள் பாடினார். பரத்வாஜ் கூட அந்த நிகழ்ச்சியில் பாடியுள்ளார்.
இதுகுறித்து பரத்வாஜ் பேசுகையில் ''12 ஆண்டு கடுமையான உழைப்பில் தான் உருவாக்கிய திருக்குறள் இசை ஆல்பத்திற்கு கனடா நாட்டில் டொராண்டோ தமிழ் சங்கம் விழா எடுத்து, உலக 'திருக்குறள் மாநாட்டில்' கவுரவித்தது மகிழ்ச்சி. 1330 குறளுக்கும் குரல் கொடுத்து, இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் நான் என்பதில் பெருமை'' என்கிறார்.




