ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். புஷ்பா, ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். தொகுப்பாளினியாக வாழ்க்கையை துவங்கி தற்போது படங்களில் வில்லி மற்றும் குணச்சித்ரம் வேடங்களில் நடித்து வருகிறார்.
திருமணமாகி இரு பிள்ளைகளுக்கு தாயாக உள்ள நிலையில் வலைதளத்தில் சமயங்களில் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிடுவார். இதனால் இவரை நிறைய பேர் டிரோல் செய்வதும் உண்டு. அப்படி டிரோல் செய்பவர்களுக்கு பதிலடியும் கொடுக்கும் இவர் அவர்களின் வலைதள கணக்கை பிளாக்கும் செய்துவிடுவார்.
இதுபற்றி அனுசுயா கூறுகையில், ‛‛வலைதளங்களில் என்னைப் பற்றி எதிர்மறையாக பேசினால் உடனடியாக அவர்களை பிளாக் செய்துவிடுவேன். அப்படி இதுவரை 30 லட்சம் பேரை பிளாக் செய்துள்ளேன். இதுபோன்ற விஷயங்களை எல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. என் வாழ்வில் மட்டுமல்ல இந்த உலகத்திலும் பலரை பிளாக் செய்துள்ளேன்'' என்கிறார்.




