ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

திருநெல்வேலி தமிழராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு, கன்னட படங்களில் இசை அமைத்து வந்த பரத்வாஜ் 'காதல் மன்னன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஆட்டோகிராப், ஐயா உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். முன்னணியில் இருக்கும்போதே திடீரென வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சில ஆல்பங்களுக்கு இசை அமைத்தார். பின்னர் சில ஆண்டுகள் வெளிநாட்டில் தன் மகளுடன் வசித்தார். கடைசியாக அவர் இசை அமைத்தது 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் இருவர்' படத்திற்கு.
தற்போது புத்துணர்ச்சியுடன் மீண்டும் திரையிசை உலகத்திற்கு திரும்பி இருக்கிறார். இசை நிகழ்ச்சியின் மூலம் தனது ரீ என்ட்ரியை தொடங்கி உள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நாளை (19ம் தேதி) இசை நிகழ்ச்சி நடத்துகிறார். திருப்பூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருப்பூர் ரோட்டரி கிளப் அங்கு புற்று நோயாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவமனையை கட்டி வருகிறது. அதற்கு நிதி திரட்டும் விதமாக, இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.




