ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

எம்.சுந்தர் இயக்கத்தில் அஜித் தேஜ், ஸ்ரீஸ்வேதா நடிப்பில் உருவாகி உள்ள படம் அந்த 7 நாட்கள். பாக்யராஜ் நடித்த அந்த 7 நாட்கள் படத்துக்கும், இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் இந்த படத்தில் பாக்யராஜ் நடித்து இருக்கிறார். நாய் கடியால் பாதிக்கப்பட்ட ஹீரோயின் ஸ்ரீஸ்வதாவுக்கு என்ன நடக்கிறது. ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் ஹீரோயின் பிழைத்தாரா என்ற ரீதியில் கதை நகர்கிறது. அந்த நோய் பாதிக்கப்பட்டவராக தத்ரூபமாக நடித்து இருக்கிறார் கோவையை சேர்ந்த ஸ்ரீஸ்வேதா.
இது குறித்து அவர் பேசுகையில் 'நடிக்க நல்ல வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த நிலையில், இந்த கதை வந்தது. இப்படிப்பட்ட கேரக்டரா என சற்றும் யோசிக்கவில்லை. எனக்கு நடிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதி நடித்தேன். அதற்காக, அந்த நோய் பாதித்தவர்களின் வீடியோக்களை பார்த்து, நிறைய கற்றுக்கொண்டேன். அது கொடூரமான பாதிப்பு. அப்படி நடித்தை பார்த்து பலரும் பாராட்டியிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் தெரு நாய்களை ஒழிக்கபட வேண்டும் என்று சொல்லமாட்டேன். அதன் இனப்பெருக்கத்தை தடை செய்ய வேண்டும் என்பதே என் கருத்து, நானும் ஒரு நாய் வளர்க்கிறேன்' என்றார்.
ஒரு சூப்பர் பவர் மூலமாக, ஒருத்தர் கண்ணை பார்த்தே, அவர்கள் உடனே மரண அடைவார்களா? எப்போது அது நடக்கும் என்ற சக்தி ஹீரோவுக்கு கிடைக்கிறது. ஹீரோயின் கண்ணை பார்க்கும்போது அவர் 7 நாட்கள் மட்டுமே வாழ்வார் என தெரிகிறது. அந்த சமயத்தில் நாய்கடி காரணமாக ஹீரோயினுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட, கொடைக்கானலுக்கு போய் அந்த பாதிப்பை குணப்படுத்தினாரா ஹீரோ என்ற ரீதியில் இந்த கதை நகர்கிறதாம்.




