விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பறந்து போ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி. படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியிருப்பதாவது: ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய 'பேரன்பு' படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன்.
அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கையை காப்பாற்றி இருப்பதாக நினைக்கிறேன். மலையாளத்தில் நான் நடித்த 'நுன்னக்குழி' படத்துக்கு கிடைத்த வரவேற்பால் தமிழ் ரசிகர்களும் எனக்கு தங்களது அன்பை கொடுத்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் காமெடி வேடங்களில் அதிகம் நடித்திருந்தாலும் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை. அதனால் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க விரும்புகிறேன். பறந்து போ படத்திலும் அதுபோல், எல்லா அம்சங்களும் கலந்த கேரக்டர்தான். இதில் காமெடியும் செய்திருக்கிறேன். எமோஷனலான நடிப்பும் தந்திருக்கிறேன். அதற்கு காரணம், ராம் சார்தான். அவர் எனக்காக காத்திருந்து இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். நமது வீட்டுக்கு பக்கத்திலுள்ளவர்கள் எப்படி யதார்த்தமாக இருப்பார்களோ அதுபோன்ற ஒரு குடும்பத்தின் கதை இது" என்றார்.