மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சென்னை பட்டினப்பாக்கம் ஏரியாவில் பல ஆண்டுகள் வசித்தார். அவர் இறுதி சடங்கும் அங்கே தான் நடந்தது. இந்நிலையில் எம்.எஸ்.வி வீடு இருக்கும் பட்டினபாக்கம் டிமாண்டி சாலை பெயரை எம்.எஸ்.வி சாலை என பெயர் மாற்ற சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து எம்.எஸ்.வி மகன் பிரகாஷ், தினமலருக்கு அளித்த பேட்டியில், அப்பா வசித்த எங்கள் வீடு இருக்கும் தெருவுக்கு அவர் பெயர் வைக்கப்பட உள்ளது மகிழ்ச்சி. இதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் நேரு மற்றும் சென்னை மேயர், துணை மேயருக்கு நன்றி. விரைவில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும். பின்னர் முறைப்படி பெயர் சூட்டும் விழா நடக்கும்.
அப்பாவும், முதல்வரின் அப்பாவுமான கருணாநிதியும் அவ்வளவு அதிகமான நட்புடன் இருந்தார்கள். இன்றும் அரசு விழாக்களில் இடம் பெறும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை அமைத்தவர் அப்பாதான். அதை செய்தவர் முதல்வரின் அப்பா. அதனால் தெரு பெயர் சூட்டும் விழாவுக்கு முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். அடுத்த எம்.எஸ்.வி பெயரில் மணி மண்டபம், சிலை போன்ற கோரிக்கைகளை அரசிடம் வைக்க உள்ளோம் என உருக்கமாக தெரிவித்தார்.