தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

துல்கர் சல்மான் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. அதையடுத்து அவர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்நிறுவனம் வெளியேறியதை அடுத்து சிம்புவே அந்த படத்தை தயாரித்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. என்றாலும் தற்போது வரை அந்த படம் தொடங்கப்படவில்லை. அதோடு ஏற்கனவே மூன்று புதிய படங்களில் கமிட்டாகி இருந்த சிம்பு, தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நேரத்தில் சிம்புவுக்கு இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த தேசிங்கு பெரியசாமி அடுத்தபடியாக 'ஜெய் பீம், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' போன்ற படங்களில் நடித்த மணிகண்டனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதன் காரணமாக சிம்புவின் ஐம்பதாவது படம் டிராப் செய்யப்பட்டதா? இல்லை தள்ளி வைக்கப்பட்டுள்ளதா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.