மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் தனியார் மதுபான விடுதி ஒன்றில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அதிமுக ஐ.டி விங் நிர்வாகியான பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்து போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் யாரிடம் போதைப்பொருள் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்றெல்லாம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமாரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது பிரதீப் மூலமாக ஸ்ரீகாந்துக்கு பிரசாத் போதைப்பொருள் வழங்கியதாக வாக்குமூலம் அளித்தனர். இதற்கிடையே கைதான அதிமுக ஐ.டி விங் நிர்வாகி பிரசாத்தை அதிமுக.,வில் இருந்து நீக்கினர்.
இந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்னர், சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். ஒரு கிராம் கொக்கைன் போதைப்பொருளை ரூ.12 ஆயிரம் கொடுத்து ஸ்ரீகாந்த் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்தை வைத்து 'தீக்கிரை' எனும் படத்தை மூன்று தயாரிப்பாளர்களுள் ஒருவராக பிரசாத் தயாரித்து வந்துள்ளார்.அத்திரைப்படம் தொடர்பான பார்ட்டியில் பிரசாத், ஸ்ரீகாந்துக்கு கொகைன் வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.