வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள்.
தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறை. சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு, உத்தாரா, சைந்தவி, ஹரிணி உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவிசோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் முத்துக்குமார் பற்றி பேசுகிறார்கள்.
''மறைந்த முத்துக்குமாருடன் பணியாற்றிய பல இயக்குனர்களும் தங்கள் அனுபவங்களை சொல்ல இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு 8 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்துக்குமார் மறைந்த சில மாதங்களில் இப்படியொரு விழா எடுக்க நினைத்தோம். சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது அதை செய்கிறோம்'' என்கிறார் இயக்குனர் ஏ.எல். விஜய்.




