15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி |

கூலி படத்தை முடித்துவிட்டு தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த இரண்டு படங்களுக்கும் மொத்தமாக பேக்கேஜ் சம்பளம் பேசப்பட்டுள்ளது. மொத்தம் 400 கோடிக்கு மேல் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் அடுத்த படத்தை, அதாவது அவரின் 172வது படத்தை தயாரிக்க பலர் போட்டியிடுகிறார்கள். அந்த படத்தில் ரஜினி சம்பளம் 300 கோடி. வரிகள் சேர்த்து இந்த தொகையாம்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவிலும் இவ்வளவு பெரிய சம்பளத்தை யாரும் வாங்கியதில்லை. அந்தவகையில் தனது 74வயதில், சினிமாவில் 50வது ஆண்டில் புது சாதனையை ரஜினி நிகழ்த்தப் போகிறார். விஜய் மட்டுமே தமிழில் 200 கோடிவரை சம்பளம் வாங்குகிறார். அஜித் 163 கோடி சம்பளத்தில் நிற்கிறார். சிவகார்த்திகேயன் இன்னமும் 100 கோடி சம்பளத்தை எட்டவில்லை. சம்பள விஷயத்தில் ரஜினியின் இடத்தை மற்றவர்கள் பிடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.