இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு | 'டிராகன்' 100வது நாள் விழாவுக்கு 'ஆப்சென்ட்' ஆன ஹீரோயின்ஸ் | கலைத் துறையின் மாஸ்டர் : கமல்ஹாசனுக்கு பவன் கல்யாண் வாழ்த்து | 15 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித், சரண் கூட்டணி | 2027ம் ஆண்டில் வெளியாகும் ‛பிச்சைக்காரன் 3' | தமிழில் ரீ-மேக் ஆகிறது தெலுங்கு ‛கோர்ட்' |
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக் ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரவலாக நடித்து வரும் இவர் தற்போது சூரிக்கு ஜோடியாக ‛மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஒரு சிறுவனுக்கும், அவனது தாய்மாமனுக்கும் இடையே நடக்கும் பாசத்தை வைத்து குடும்ப படமாக எடுத்துள்ளனர். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். ராஜ்கிரண், சுவாசிகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மே 16ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : ‛‛சூரி மிகவும் நேர்மையான மனிதர். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை உள்ளது. அவர் பேசும் வார்த்தைகளிலும் அன்பு, மரியாதை உள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது'' என்றார்.