வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும் (பெப்சி) மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பெப்சி தொழிலாளர்கள், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படப்பிடிப்புகளில் பணியாற்றக்கூடாது என்று பெப்சி அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை பெப்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் "திரைப்பட துறையை சேர்ந்த 23 சங்கங்களை உள்ளடக்கிய தொழிலாளர்கள் கூட்டமைப்பான, 'பெப்சி' அமைப்பில், 25,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகள், புதிதாக தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர். இதற்காக, முதல்வர் தலைமையில் புதிய அமைப்புக்கான துவக்க விழா நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கண்டித்து, வரும் 14ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், கண்டன ஆர்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனது திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் ரத்து செய்துள்ளது.