சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
தக்காளி சீனிவாசன் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான படம் ஜென்ம நட்சத்திரம். நாசர், விவேக், பிரமோத், சிந்துஜா நடித்து இருந்தனர். ஒரு சாத்தானின் குழந்தை செய்யும் அட்டகாசங்களே படத்தின் கதை. இப்போது மீண்டும் ‛ஜென்ம நட்சத்திரம்' என்ற தலைப்பில் ஒரு படம் வருகிறது. தமன் , மால்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், முனிஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில் ''முந்தைய படம் போலவே இதுவும் அஞ்சி நடுங்க செய்யும் அளவுக்கு ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் தான் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக இருக்கும். அதனால், இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை நேற்று மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடிக்கு வெளியிட்டோம். 666 என்றால் என்ன? அது என்ன செய்கிறது என்பது சஸ்பென்ஸ். இதற்குமுன்பு தமனை வைத்து ஒரு நொடி என்ற படத்தை இயக்கினேன். அந்த படத்தின் கதையும், திரைக்கதையும் பேசப்பட்டு வெற்றி படமாக அமைந்தது. மீண்டும் நாங்கள் இணைந்துள்ளோம்' என்கிறார்.