சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
ஐகான் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்எல்பி தயாரித்துள்ள படம் 'மையல்'. ஏபிஜே.ஏழுமலை இயக்கி உள்ளார். மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சேது பல வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சம்ரிதிதாரா நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெய மோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் சவுந்தர்யன் மகன் அமர் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் நாயகி சம்ரிதிதாரா மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டார் அட்ராக்ஷனாக இருந்தவர் சம்ரிதிதாரா. நிகழ்ச்சியில் பேசியவர்கள் சம்ரிதிதாரா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்றார்கள்.
குறிப்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது "சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் ஹீரோயினுக்கு இது என்ன புது பெயர் என்று யோசித்தேன். இந்த படம் வெற்றி பெற்று விட்டால் இந்த பெயரையே தொடருங்கள், இல்லாவிட்டால் பெயரை சுருக்கி வையுங்கள் என்று அவருக்கு கூறிக்கொள்கிறேன். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். அதற்கான அழகும், திறமையும் அவரிடம் இருக்கிறது. அவருக்கு பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்" என்றார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது "அழகு எல்லோருக்கும் அமைந்து விடும், ஆனால் அம்சம் அமையாது. இந்த படத்தின் நாயகிக்கு அழகும் இருக்கிறது, அம்சமும் இருக்கிறது. கூடவே நடிப்பு திறமையும் இருக்கிறது. இதனால் ரவிகுமார் சொன்னது போல அவர் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். அதற்கு அவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும். அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.