பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் “பைசன் காளமடான்” படம் அக்டோபர் 17, அதாவது தீபாவளி கொண்டாட்டமாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது என்று படக்குழு சிம்பிளாக கதை பற்றி கூறியுள்ளது.
உண்மையில் இது தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு கபடி வீரரின் கதை. அந்த வீரரின் பெயர் கணேசன். இவர் துாத்துக்குடி மாவட்டம் மணத்தி என்ற ஊரை சேர்ந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு, நிறைய போராடி கபடி வீரர் ஆனார். பின்னர், தேசிய, ஆசிய அளவில் கபடி போட்டியில் பங்கு பெற்று பல வெற்றிகளை பெற்றவர். மின்வாரியத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. இந்திய அரசு மணத்தி கணேசனுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரப்படுத்தியது.
பைசன் படத்தில் சின்ன வயது மணத்தி கணேசனாக துருவ் நடிக்கிறார். சில மாதங்களாக துருவ்வுக்கு தென் மாவட்டத்தில் மணத்தி கணேசனே கபடி பயிற்சி அளித்து இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு துாத்துக்குடி மாவட்டம் வெள்ளப் பாதிப்பில் தத்தளித்தபோது, அந்த ஏரியா எம்பியான கனிமொழியிடம் மணத்தி கணேசன் உதவி கேட்டு பீல் பண்ணி வீடியோவும் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.