மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் |
ஹாலிவுட் ஆக்சன் ஹீரோ டாம் குரூஸ் நடித்துள்ள படம் “மிஷன் இம்பாசிபிள்: தி பைனல் ரெகர்னிங்”. உலக ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இத்திரைப்படம், மிஷன் இம்பாசிபிள் தொடரின் எட்டாவது மற்றும் இறுதி பகுதியாகும். டாம் குரூஸ், ஹெய்லி அட்வெல், சைமன் பெக், வானெஸா கெர்பி, ஹென்றி செர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுமார் 400 மில்லியன் செலவில் உருவான இந்த திரைப்படம், தற்போது வரை இந்த தொடரில் மிக அதிகபட்ச பட்ஜெட்டில் உருவான படமாகும். கிரிஸ்டோபர் மெக்வாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் மே 17 அன்று வெளியாகும் என்றும் மற்ற நாடுகளில் மே 23ம் தேதி வெளியாகும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது.