ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடித்த 'டாப் கன் : மேவ்ரிக்க் கடந்த மே மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இது 1986ம் ஆண்டு வெளியான டாப்கன் படத்தின் இரண்டாவது பாகம். இந்நிலையில் படம் தற்போது வருகிற டிசம்பர் 26ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தை ஜோசப் கொசின்ஸ்கி இயக்கி இருந்தார். டாம் குரூஸுடன் மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கான்னெலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 170 மில்லியன் டாலர் செலவில் உருவான படம் 7500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது.
இந்நிலையில், டாப் கன் மேவ்ரிக் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் டாம் குரூஸ். அதுவும் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அவர் நன்றி கூறியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரசூட் உதவியுடன் ஹெலிகாப்படரில் இருந்து குதிக்கும் முன் அவர் அதன் விழிம்பில் அமர்ந்து கொண்டு "அனைவருக்கும் வணக்கம், நாங்க தென்னாப்பிரிக்காவைக் கடந்துவிட்டோம். மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெக்கனிங் படங்களின் இரண்டு பாகங்களை ஷூட் செய்ய காத்திருக்கிறோம். டாப்கன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லாமல் இந்த ஆண்டு முடிவடைவதை நான் விரும்பவில்லை, டாப் கன்: மேவரிக் படத்தை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறியபடியே கீழே குதித்தார்.
இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.