தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பிரபல பாலிவுட் நடிகை டிம்பிள் ஹயாதி. தமிழில் 'தேவி 2' படத்தில் பிரபு தேவாவுடன், விஷால் ஜோடியாக 'வீரமே வாகை சூடும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் ஷேக்பெட் என்னும் இடத்தில் இருக்கும் அபார்ட்மென்ட்டில் டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் வசித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த சில மாதங்களாக பணிப்பெண்ணாக இவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண், டிம்பிள் ஹயாதி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அவர் வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே தன்னை அவர் டார்ச்சர் செய்தாகவும், நிர்வாணப்படுத்தி வீடியோ எடுக்க முயற்சித்தாகவும், சரியான உணவு, உடைகூட தரவில்லை. டிம்பிளும், அவரது கணவரும் இணைந்து என்னை அடித்து உதைத்து எனது உடைகளை கிழித்தனர் என்றும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
போலீசார் டிம்பிள் ஹயாதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் டிம்பிள் கைதாகலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.