தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கடந்த மாதம் மலையாளத்தில் சூப்பர் உமன் கதை அம்சம் கொண்ட லோகா சாப்டர் 1 : சந்திரா என்கிற திரைப்படம் வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்தார். டொமினிக் அருண் இயக்கினார். இதில் கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றி இருந்தார் நடிகை சாந்தி பாலச்சந்திரன். 270 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழில் விக்ரம் நடித் காசி, என் மன வானில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினயன் இந்த படம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, “என் மூளையில் உருவாகி இருந்த ஒரு கதையை திருடி இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என சொல்ல தோன்றுகிறது. தானும் இது போன்ற கதை அம்சம் கொண்ட படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் லோகா படக்குழுவினர் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பு மிக சிறப்பு'' என்று பாராட்டியுள்ளார் வினயன்.