என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

1950களில் படத்தை நோக்கி மக்களை இழுப்பதற்காக சில கவர்ச்சிகரமான விஷயங்கள் சேர்க்கப்பட்டன. குறிப்பாக லலிதா, பத்மினி நடனங்கள் இணைக்கப்படும். அல்லது நகைச்சுகை தனி டிராக்காக எடுக்கப்பட்டு இணைக்கப்படும், சர்க்கஸ் காட்சிகள் இணைக்கப்படும். அப்படியான படங்களில் ஒன்று 'பொன்னி'. இந்த படத்தை ஏ.எஸ்.சாமி இயக்கினார். பாதி படத்தில் அவர் விலகிக் கொள்ள, மீதி படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்கினார்.
பத்மினி, ஸ்ரீராம், லலிதா, டி.பாலசுப்ரமணியம், டி.எஸ்.துரைராஜ், பி.சாந்தகுமாரி, எம்.ஆர்.சுவாமிநாதன், எம்.எல்.என்.கவுசிக், வி.எம்.ஏழுமலை, என்.எஸ். நாராயண பிள்ளை, டி.பி.பொன்னுசாமி பிள்ளை, பி.எஸ்.ஞானம், கே.எஸ்.கன்னையா, சி.கே. நடராஜ், பொன்னையா, பச்சைநாயகி, 'பேபி' ஆஷா, சி.ஆர். சந்திரகுமாரி, உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இது சதாரண குடும்ப கதைதான் அதனால் 'பாமா விஜயம்' என்ற நாட்டிய நாடகம் படத்தில் இணைக்கப்பட்டது. இதில் ராகினியும், அம்பிகாவும், சுகுமாரியும் ஆடினார்கள். அதோடு இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர்களான தாரா சிங், கிங் காங் மோதும் நிஜமான குத்துச் சண்டை காட்சிகளும் இணைக்கப்பட்டன.