சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாள நடிகர் பஹத் பாசில் கடந்த சில வருடங்களாக தமிழ், தெலுங்கு என தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும், இயக்குனர்களால் மிகவும் தேடப்படும் ஒரு நடிகராக மாறிவிட்டார்.. ஆனாலும் கதைகளை செலெக்ட்டிவாக தேர்ந்தெடுப்பதில் கவனம் காட்டி செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அவரை தேடி வந்த டாம் குரூஸ் நடிக்கும் ஹாலிவுட் பட வாய்ப்பு வந்தும் கூட அதை ஏற்க மறுத்துவிட்டார் என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் அந்த படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்து உள்ளார் பஹத் பாசில்.
“அந்த படத்தின் இயக்குனருடன் வீடியோ காலில் தான் பேசினேன். அவரை நான் பெரிதாக இம்ப்ரஸ் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக என்னுடைய ஆங்கில பேச்சு வழக்கு. இருந்தாலும் அவர் இந்த படத்திற்காக நான்கு மாதம் அமெரிக்காவில் வந்து தங்க வேண்டும், ஆனால் சம்பளம் கிடையாது என்று கூறினார். அவரது பேச்சில் இருந்தே அவர் தேடிக் கொண்டிருக்கும் ஆள் நான் இல்லை என்பது எனக்கு புரிந்து விட்டது. நான் மறு யோசனை இன்றி இந்த படத்தில் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டேன். தவிர அந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு என்னால் அதில் எதையும் உணர முடியவில்லை” என்று கூறியுள்ளார்.