கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் | மனைவியை இழந்து கலங்கி நிற்கும் கவுண்டமணி : இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள் | டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள் | வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ | குழந்தைகளை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி: வேதிகா | கணவன் மனைவி நடித்த யுகம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கூலி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை நோக்கி நகர்வதாகத் தகவல்.
சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் இப்படத்தின் படப்பிடிப்புப் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டார்கள். அதைப் பார்த்த பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. 'வேட்டையன்' படத்தைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் திருப்தியடையாத நிலையில் 'கூலி' வேற மாதிரியான படமாக இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 120 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிக்கும் படம் என்றாலே அதன் ஓடிடி உரிமை 100 கோடியைக் கடந்துவிடுகிறது. சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை ஆகியவற்றுடன் மட்டுமே படத்திற்காக போட்ட முதலீட்டை தயாரிப்பாளர்களால் எடுத்துவிட வாய்ப்புள்ளது. தியேட்டர் வியாபாரம், வசூல் ஆகியவை கூடுதல் லாபக் கணக்கில் தான் சேரும்.