'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் வெளிவந்த முக்கியமான படங்களில் ஒன்று 'கைதி'. இன்றைய ஸ்டார் இயக்குனர்களில் ஒருவராக உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம். 2019ல் வெளிவந்த அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ஏற்கெனவே அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் கூறி வந்தனர்.
ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து வேறு படங்களை இயக்கி வந்தார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பின்பு 'கைதி 2' படத்தை இயக்க வருவார் என்று தெரிகிறது.
இரு தினங்களுக்கு முன்பு லோகேஷின் பிறந்தநாளன்று அவரை சந்தித்த கார்த்தி, அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'டில்லி ரிட்டர்ன்ஸ்' என்று குறிப்பிட்டுள்ளார். உடன் 'கைதி, கைதி 2' படத்தின் தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு உடனிருந்தார்.
'கைதி 2' படப்பிடிப்பு இவ்வருடக் கடைசியில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. கைதி 2ம் பாகத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜனநாயகன் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரிப்பதாக கூறப்படுகிறது.