கார்த்தியை இயக்க போகும் கவுதம் மேனன் | ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம் | ஓடிடியில் நேரடியாக வெளியான ஹாலிவுட் படம் | பிளாஷ்பேக் : ஜெயலலிதாவை பாடகியாக்கிய கே.வி.மகாதேவன் | பிளாஷ்பேக் : இன்று 'ஆலம் ஆரா' பிறந்தநாள் | இளையராஜாவிற்கு அரசின் சார்பில் விழா : முதல்வர் ஸ்டாலின் | புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன் - ரேஷ்மா பசுபுலேட்டி | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு சினிமாவில் நடந்த அவமானம் | ரன்யா ராவ் கதாநாயகியாக நடித்த வாகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் | மோகன்லாலின் அன்பு கட்டளையை மீற முடியவில்லை : விவேக் ஓபராய் |
தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னனி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது 'கராத்தே பாபு' படத்தில் நடித்து வருகிறார். இது அல்லாமல் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தில் வில்லன் ஆக ரவி மோகன் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்துள்ள ஜீனி படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படங்களுக்கு பிறகு ரவி மோகன் அவரின் நீண்ட கால ஆசையான இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இந்தாண்டிற்குள் இந்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இதை ரவியே தயாரித்து இயக்குகிறார். மேலும் இதில் கதாநாயகனாக யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. இருவரும் இணைந்து கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். இந்தபடம் காமெடி உடன் கூடிய எமோஷனல் கதையில் உருவாகிறதாம்.