வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் | கார்த்தியை இயக்க போகும் கவுதம் மேனன் | ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம் | ஓடிடியில் நேரடியாக வெளியான ஹாலிவுட் படம் | பிளாஷ்பேக் : ஜெயலலிதாவை பாடகியாக்கிய கே.வி.மகாதேவன் | பிளாஷ்பேக் : இன்று 'ஆலம் ஆரா' பிறந்தநாள் | இளையராஜாவிற்கு அரசின் சார்பில் விழா : முதல்வர் ஸ்டாலின் | புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன் - ரேஷ்மா பசுபுலேட்டி | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு சினிமாவில் நடந்த அவமானம் | ரன்யா ராவ் கதாநாயகியாக நடித்த வாகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் |
தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகை ஸ்ரீலீலா. தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நடிக்கிறார். இதுதவிர ஹிந்தியிலும் நடிக்கிறார். நடிப்பை தாண்டி ஸ்ரீலீலா நடனத்திலும் பெயர் பெற்றவர். மகேஷ் பாபு உடன் ஆடிய ‛மடக்கி தட்டு', அல்லு அர்ஜுன் உடன் ஆடிய ‛கிஸ்ஸிக்' ஆகிய பாடல்களில் இவரது நடனம் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது தெலுங்கில் நிதின் உடன் ‛ராபின்ஹுட்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்பட விழாவில் பேசிய தொகுப்பாளர், ‛‛லீலா என்றால் பாட்டு, பாட்டு என்றால் நடனம், நடனம் என்றால் லீலா'' என்றார். இதற்கு உடனடியாக பதிலளித்த ஸ்ரீலீலா, ‛‛லீலா என்றால் வசனம், வசனம் என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் லீலா. இதற்காகவே இந்த படத்தில் நடித்தேன்'' என்றார்.
தனது நடிப்பு பேசப்படுவதை விட நடனம் ஆடுவது தான் பேசப்படுகிறது. இதனால் தன் மீது டான்சர் என்ற முத்திரை விழுந்துவிட்டது. இதை உடைத்து நடிகை என்று கூற வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு பதிலை அளித்துள்ளார் ஸ்ரீலீலா.