100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
கோவில்களில் வழக்கமாக அதிகாலையில் பக்தி பாடல்களை ஒளிபரப்புவார்கள். குறிப்பாக அம்மன் கோவில்களில் எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா, சூலமங்கலம் சகோதரிகள் பாடிய அம்மன் பாடல்களை ஒலிபரப்புவார்கள். திரைப்படங்களில் இடம்பெற்ற பக்தி பாடல்களையும் ஒலிபரப்புவார்கள்.
ஆனால் திருவிழா காலங்களில் எல்லா திரைப்பட பாடல்களையும் ஒலிபரப்புவார்கள். அதுவும் தற்காலத்தில் கோவில்களில் நடக்கும் மேடை நடன நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்களுக்குத்தான் ஆபாசமாக நடனமாடுவார்கள். இசை கச்சேரிகளிலும் சினிமா பாடல்களே பாடுவார்கள். இந்த நிலையில் இனி கோவில் வளாகத்திற்குள் சினிமா பாடல்களே பாடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தனது ஊர் கோவிலில் சினிமா பாடல் கச்சேரி நடந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'புதுச்சேரி திருமலைராயன்பட்டினத்தில் உள்ள வீழி வரதராஜப் பெருமாள் கோவில் திருவிழாவின்போது கோவில் வளாகத்துக்குள் இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. அதில் பக்திப்பாடல்களைத் தவிர்த்து சினிமா பாடல்கள்தான் அதிகமாக பாடப்பட்டன. இந்த கோவிலுக்கு அறங்காவலர்களையும் நியமிக்கவில்லை. அறங்காவலர் நியமிக்கப்பட்டு இருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் கோவில் வளாகத்துக்குள் நடந்து இருக்காது'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் அரசு வழக்கறிஞரின் வாதங்களை கேட்ட பிறகு 'எந்த ஒரு கோவில் திருவிழா ஆனாலும், கோவில் வளாகத்துக்குள் கோவில் நிர்வாகிகள் அல்லது பக்தர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் இசைக்கச்சேரியில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். பக்தி அல்லாத சினிமா பாடல்களை பாடக்கூடாது" என்று உத்தரவிட்டது.