நாம 2024ல் இருக்கிறோம் : ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா காட்டம் | ரஜினி - கமலுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன? - லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில் | 2025 மார்ச்சில் சூர்யா 44வது படம் ரிலீஸ் : கார்த்திக் சுப்பராஜ் | சாய் பல்லவியின் 10 நிமிட நடிப்பு என் இதயத்தை வென்று விட்டது : ஜோதிகா | சூர்யா 45வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | பில்லாவுக்கு பிறகு குட் பேட் அக்லியில் மாறுபட்ட அஜித் : ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் | 'தெறி' டீசர் சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'தெறி' ஹிந்தி டீசர் | பாலிவுட் வாரிசுகள் நடிக்கும் 'ஆசாத்' | அல்லு அர்ஜுன் மீதான தேர்தல் வழக்கு தள்ளுபடி | நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு… |
நிக் ஸ்டூடியோ சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கும் பான் இந்தியா படம் 'நாகபந்தம் : சீக்ரெட் ட்ரெஷர்'. விராட் கர்ணா இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ்.அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவாளராகவும், அபே இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். 2025ம் ஆண்டில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
படத்தை இணை தயாரிப்பு செய்வதுடன் இயக்கவும் செய்கிறார் அபிஷேக் நாமா. படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. சிரஞ்சீவி கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். படம் பற்றி அபிஷேக் நாமா கூறும்போது ‛‛திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் புதையல் திறக்கப்பட்டதை அடுத்து, பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ரத்ன பண்டாரத்தை அடுத்து, மறைந்துள்ள பொக்கிஷங்கள் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்கள் நாகபந்தம் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் கதை இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்களுடன் தொடர்புடைய நாகபந்தத்தைச் சுற்றி வருகிறது. அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். உலகத்தரத்திலான மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மந்திரம், மர்மம் மற்றும் சாகசங்கள் அடங்கிய புதிய சாம்ராஜ்யத்திற்கு, ஒரு ஆழமான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்'' என்றார்.