விஜய் டிவி நடிகரான ஸ்டாலின் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தற்போது அந்த தொடரின் சீசன் 2வில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து வரும் மீனா செல்லமுத்துவோடு, ஸ்டாலின் முத்துவிற்கு திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படங்களும் செய்திகளும் வெளியானது. இதனையடுத்து பலரும் ஸ்டாலின் முத்துவிற்கும் அந்த நடிகைக்கும் வாழ்த்துகள் கூற ஆரம்பித்தனர். சூட்டிங் ஸ்பாட்டில் எதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படமானது இப்படியான வதந்தியை கிளப்பியதால், அந்த நடிகையும் மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.
மற்றொருபுறம் ஸ்டாலின் முத்துவின் குடும்பத்தினரும் அந்த புகைப்படம் குறித்து கேள்விகள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் மன அழுத்தமடைந்த ஸ்டாலின் முத்து, பத்து நாட்களுக்கு மேல் நிம்மதியாக சாப்பிட கூட முடியாமல், தூங்க முடியாமல் கஷ்டப்பட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து அவர் போலீஸ் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது ஸ்டாலின் முத்துவின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள ஊரில் உள்ள ஒரு யூ-டியூபர் தான் இதுபோல தவறான செய்தியை பரப்பியதாக தெரிய வந்தது. இதனையடுத்து கடுப்பான ஸ்டாலின் இனி தன் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.