நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு | ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் | கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா துலிபாலா | தேசிய விருது இருக்க, ஆஸ்கர் எதற்கு?: வைரலாகும் கங்கனாவின் பதிவு | தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர், பாலிவுட் நடிகை | தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம் | பிளாஷ்பேக் : 'சலங்கை ஒலி' ஆன அனு பல்லவி |
இளங்கோ ராம் இயக்கத்தில், வைபவ், சுனில் மற்றும் பலர் நடித்த 'பெருசு' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் 'ஏ' சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம்.
படத்தின் கதை என்ன என்பதை வெளியில் சொன்னாலும் அதில் உள்ள சிக்கலை எந்த ஒரு விமர்சனமும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இப்படியெல்லாம் கூட ஒரு கதையை யோசிக்க முடியுமா என்று ஒரு சாரார் கடுமையாகவே கமெண்ட் செய்து வருகிறார்கள்.
'ஏ' சான்றிதழ் பெற்ற எத்தனையோ திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. ஆனால், அந்தரங்க உறுப்புகளை மையமாக வைத்து எந்த ஒரு திரைப்படமும் இதுவரை வந்ததில்லை. இந்தப் படம் அப்படியான ஒரு படம்.
பெண்களை போகத்திற்குரியவர்கள் என்ற சிந்தனையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூட எந்தவிதமான எதிர்ப்பும் பதிவு செய்யாதது ஆச்சரியமாக உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குனர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டில் பங்கு கொண்டு, இம்மாதிரியான படங்களுக்கும் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தைத் தர முயல்வது தரக்குறைவான செயலாகவே பார்க்கப்படுகிறது.
சினிமா ஒரு பொழுதுபோக்கு என்பதற்காக எதை வேண்டுமானாலும் படமாக எடுத்துவிட முடியுமா ?.