'ஆபரேஷன் சிந்தூர்' : சினிமா பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் | பிளாஷ்பேக்: காலம் மறந்து விட்ட இசை ஜீவன் | பிளாஷ்பேக் : மும்மொழி நாயகியான முதல் நாயகி | இன்று நன்றி சந்திப்பு நடத்தும் 'ரெட்ரோ' குழு | ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி நஷ்ட ஈடு வழங்க கோர்ட் இடைக்கால தடை | ஒரு திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மாற்ற இவ்வளவு சிரமமா? | பணி 2ம் பாகம் உறுதி : ஜோஜூ ஜார்ஜ் அறிவிப்பு | பழங்குடியினர் என்கிற வார்த்தையை பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்த விஜய் தேவரகொண்டா | நிர்பந்தத்தால் விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாமல் போனது : இயக்குனர் கோபிசந்த் மாலினேனி | போதைப்பொருள் வைத்திருந்ததாக துல்கர் சல்மான் பட இயக்குனர் கைது |
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பிரபல நட்சத்திர வீரராக வலம் வந்தவர் டேவிட் வார்னர். சமீப வருடங்களாக இந்திய சினிமாவை பெரிய அளவில் விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக தெலுங்கு திரையுலகம் பக்கம் தான் இவரது கவனம் திரும்பி உள்ளது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து ஆடிய 'புட்டபொம்மா' பாடலுக்கு தானும் அதுபோல நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் இளம் நடிகர் நிதின் மற்றும் ஸ்ரீலீலா இருவரும் ஜோடியாக நடித்துள்ள 'ராபின்ஹூட்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டேவிட் வார்னர். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக நடிகராக அடி எடுத்து வைத்துள்ளார் வார்னர். தற்போது இவரது கதாபாத்திர போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் மார்ச் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.