இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
அன்றைய உச்ச நட்சத்திரங்களான எம் ஜி ஆர், சிவாஜி என்ற அந்த இரு பெரும் இமயங்களை ஒரே படத்தில் நடிக்க வைத்த பெருமைக்குரிய இயக்குநர்தான் டி ஆர் ராமண்ணா. “கொஞ்சும் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளியாக்கி விட்டு கொட்டு மேளம் கொட்டியது சரியா? தப்பா?” என்று சோக ராகம் பாட வைத்து “கூண்டுக்கிளி” திரைப்படத்தை 1954ல் தயாரித்து இயக்கியிருந்தார். எம் ஜி ஆர், சிவாஜி இருவரையும் தனது ஒரே திரைப்படத்தில் நடிக்க வைத்து பெரும் புரட்சி செய்து படத்தையும் வெளியிட்டார். படம் திரைக்கு வந்தது. படத்தைக் காண மக்கள் திரண்டு வரவில்லை. ராமண்ணாவுக்கு மிஞ்சியது வேதனை மட்டுமே.
“கூண்டுக்கிளி” வெளிவந்த 1954ல் தான் “தூக்கு தூக்கி” என்ற திரைப்படமும் வெளிவந்தது. சிவாஜி நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்தது. அப்படி என்னதான் அந்தப் படத்தில் இருக்கிறது? பார்த்து தெரிந்து கொள்ள விரும்பினார் இயக்குநர் டி ஆர் ராமண்ணா. “தூக்கு தூக்கி” திரைப்படம் அப்போது சென்னையில் திரையிடப்படாததால், திருவள்ளுர் நகரில் ஓடிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு தனது கம்பெனி ஆட்களுடன் காரில் புறப்பட்டுச் சென்று, இரவுக் காட்சி பார்த்து வந்தார்.
அவருடன் படம் பார்க்கச் சென்றவர் என்ன தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்க, புரட்சிக் கருத்துடன் கூடிய கதை வேண்டுமென்று “கூண்டுக்கிளி”யை எடுத்தேன். அதில் பலன் ஏதும் கிட்டவில்லை. மக்கள் கேளிக்கைகளையும், ஆடல், பாடல்களையும் விரும்புகின்றனர். எனது அடுத்த படத்தைப் பார்! கேளிக்கைகளை வைத்தே படமாக்குகின்றேன் என்றார் டி ஆர் ராமண்ணா.
1935ல் வெளிவந்த “தூக்கு தூக்கி” கதையை 1954ல் 'அருணா பிலிம்ஸார்' படமாக ரீமேக் செய்து தயாரித்து வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்தனர். அதே 1935ல் வெளிவந்த வேறு கேளிக்கை திரைப்படம் எது? என்று இயக்குநர் டி ஆர் ராமண்ணா தேடியபோது கிடைத்ததுதான் “குலேபகாவலி” என்ற திரைப்படம்.
அதே ''குலேபகாவலி'' பெயரில், எம் ஜி ஆர் நாயகனாக நடிக்க, டி ஆர் ராஜகுமாரி, ஜி வரலக்ஷ்மி, ராஜசுலோச்சனா, கே ஏ தங்கவேலு, ஜே பி சந்திரபாபு, ஈ வி சரோஜா, ஏ கருணாநிதி, ஈ ஆர் சகாதேவன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, 1955ல் ஆடல், பாடல், கேளிக்கைகளோடு ரீமேக்காக வெளிவந்தது. இத்திரைப்படம் இயக்குநர் டி ஆர் ராமண்ணாவிற்கு ஒரு மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்து அவருடைய எதிர்பார்ப்பை இரு மடங்காக பூர்த்தி செய்திருந்தது.