நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு | ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் | கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா துலிபாலா | தேசிய விருது இருக்க, ஆஸ்கர் எதற்கு?: வைரலாகும் கங்கனாவின் பதிவு | தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர், பாலிவுட் நடிகை | தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம் | பிளாஷ்பேக் : 'சலங்கை ஒலி' ஆன அனு பல்லவி |
தமிழில் 'அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் தமிழைவிட மலையாள திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தி படங்களை எடுத்து வருகிறார். கடந்த ஒரு வருடமாகவே இவரது திருமணங்கள் குறித்தும் திருமண முறிவுகள் குறித்தும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா.
இது இவரது நான்காவது திருமணம். இதற்கு முன்பு மூன்று திருமணங்கள் செய்து அவர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார் பாலா. இதில் இரண்டாவது மனைவியான பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் மற்றும் மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத் ஆகியோர் நடிகர் பாலா மீது அவ்வப்போது சோசியல் மீடியாவில் சில குற்றச்சாட்டுகளை வைத்து வீடியோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வந்தனர். அதற்கு அவ்வப்போது பாலாவும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இது இப்படியே தொடர்கதையாக இருப்பதால் கொச்சியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு தனது மனைவி கோகிலாவுடன் நேரில் சென்று அம்ருதா சுரேஷ் மற்றும் எலிசபெத் ஆகியோர் மீது தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக புகார் கொடுத்துள்ளார் பாலா. அது மட்டுமல்ல அஜு அலெக்ஸ் என்கிற யூடியூபர் தொடர்ந்து தன்னைப் பற்றிய தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு வருவதுடன் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று அவர் மீதும் புகார் கொடுத்துள்ளார் நடிகர் பாலா.