பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் |
சூப்பர் சிங்கர் பிரபலமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான செலிபிரேட்டி ஆனார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சிவாங்கி இப்போதெல்லாம் தனது முழுகவனத்தையும் திரைப்படங்களில் நடிப்பதிலேயே செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமீப காலங்களில் மிகவும் மாடர்னாகவும், அவ்வப்போது கொஞ்சம் கிளாமராகவும் உடையணிந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வந்தார். இதனைதொடர்ந்து சிலர் சிவாங்கியின் இந்த மாற்றத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். பட வாய்ப்புக்காக தான் சிவாங்கி கவர்ச்சியான உடைகளை அணிவதாக கமெண்ட் அடித்தனர்.
இது குறித்து பதிலளித்துள்ள சிவாங்கி, 'நான் மாடர்ன் உடைகளை அணிவது பட வாய்ப்புக்காக என்றும், இப்போதெல்லாம் நான் ஆடைகளின் அளவை குறைத்துவிட்டேன் என்றும் சிலர் கமெண்ட் செய்கிறார்கள். உண்மையில் நான் முன்பு குண்டாக இருந்தேன். அதனால் மாடர்ன் உடைகள் செட்டாகவில்லை. இப்போது உடல் எடை குறைகிறது. அதனால் மாடர்ன் உடைகள் அணிய விரும்புகிறேன். அதேபோல் சினிமாவில் ஆடையை கழற்றி போட்டா வாய்ப்பு கிடைக்குமா? அப்படியென்றால் அவுத்து போட்ட எல்லோருக்குமே வாய்ப்பு கிடைத்துவிட்டதா?. உடை மாறிவிட்டால் கேரக்டர் மாறிவிடும் என்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது. காலம் முழுக்க சுடிதார் மட்டுமே அணிந்து கொண்டிருக்க முடியுமா?' என்று நெத்தியடியில் பதில் கொடுத்துள்ளார்.