தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். சிவாங்கிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒரு ரசிகர் சிவாங்கி அண்மையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை பார்த்து, 'ஐஸ்கிரீம் சாப்பிடாதீங்க. குரல்வளம் போய்விடும். சித்ரா, சுஜாதா போல் கட்டுப்பாடாக இருந்து உங்க திறமையை வளர்த்துகோங்க' என்று அட்வைஸ் செய்துள்ளார்.
அதற்கு பதிலளித்த சிவாங்கி, 'நான் எதை சாப்பிடனும் எதை சாப்பிடக்கூடாதுன்னு அட்வைஸ் செய்ய வேண்டாம். எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் செய்ய முடியும். உங்களுக்காக நான் வாழ முடியாது' என பதில் கொடுத்துள்ளார். சிவாங்கியின் இந்த பதிவிற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் அந்த நபர் சிவாங்கியின் நல்லதுக்கு சொல்லியிருக்கிறார். சிவாங்கி பொறுமையாக அவருக்கு விளக்கம் கொடுத்திருக்கலாம் என்று கூறி உள்ளனர்.