எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' |
விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா தனக்கு விபத்து ஏற்பட்டபோது உதவிய இளைஞர்கள் குறித்தும் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 'என் மகள் கைக்குழந்தையாக இருக்கும் போது பெரிய விபத்தில் சிக்கினோம். பைபாஸ் சாலை என்பதால் யாரும் உதவிக்கு வரவே இல்லை. எங்களை போட்டோ மட்டும் தான் எடுத்தார்கள். அப்போது ஒரு புது காரில் நான்கு இளைஞர்கள் வண்டிக்கு நம்பர் வாங்க சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தான் எங்களை காப்பாற்றினார்கள். அதில் ஒரு இளைஞன் கவிழ்ந்து கிடக்கும் காரினுள் தலைகீழாக இறங்கி எனது குழந்தையை தூக்கி கொடுத்தான். குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்தது. உடனே நான் கூட்டத்தை கூட பொருட்படுத்தாமல் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது மற்றொரு இளைஞன் துண்டை எடுத்து என் மீது போட்டுவிட்டான். அந்த நால்வரும் உடன்பிறந்த அண்ணன் தம்பி போல் மருத்துவமனையில் எங்களை பத்திரமாக சேர்க்கும் வரை கூடவே இருந்தனர். அதன்பிறகு அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய குழந்தைக்கு காதுகுத்தும் போது அவர்களை தான் மாமாவாக உட்கார வைத்து காதுகுத்த ஆசைபடுகிறேன். அவர்கள் நால்வரையும் எப்படியாவது தேடி கண்டுபிடித்துவிடுவேன்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.