கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான் | தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன? | மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் |
ஹீரோவாக தொடர்ந்து பயணித்து வரும் வடிவேலு நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‛மாமன்னன்' படம் அவரை வேறுறொரு பரிமாணத்தில் காட்டியது. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் 'கேங்கர்ஸ்' என்ற படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கின்றார். ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதைகளத்தில் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.