சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான் | தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன? | மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ரெட்ரோ படத்தை அடுத்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, சுவாசிகா, காளி வெங்கட், நட்டி நடராஜ். ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கிய நிலையில், அதன்பிறகு சென்னை, பிறகு வண்டலூரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே .பாலாஜி.