பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
திரைப்படங்களுக்கு இருப்பது போன்று தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களுக்கு தணிக்கை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அண்மையில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரும் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் தொலைக்காட்சி தொடர்களுக்கு தணிக்கை வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "இந்தியா, நாகரிகம் மற்றும் கலாசாரம் மிகுந்த நாடு. தமிழ்நாட்டு குடும்பங்களில் தவிர்க்க முடியாத இடத்தை டி.வி.க்கள் பிடித்து உள்ளன. பல்வேறு டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், இளைஞர்களிடம் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கவர்ச்சிகரமான ஆடைகளுடன் தோன்றுதல், ஆபாச காட்சிகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. அதேபோல தொலைக்காட்சி தொடர்களும் ஆரோக்கியமானவையாக இல்லை. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, விவாகரத்து செய்வது, பழிவாங்குவது போன்ற காட்சிகள்தான் அதிகமாக வருகின்றன. இது பார்வையாளர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுவதாக அமைகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் வரும் காட்சிகள் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலேயே பதிகின்றன. சில நிகழ்ச்சிகள், வக்கிரமான, வன்முறைகளை காட்சிப்படுத்துகின்றன. கேளிக்கை என்ற பெயரில் மக்களை தவறாக வழிநடத்துவதை ஏற்க முடியாது. எனவே டி.வி. தொடர்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை ஏற்படுத்தி, வாரியத்திடம் சான்றிதழ் பெற்று நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை உறுதிப்படுத்தவும், மீறினால் கடும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தது.