ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
சின்னத்திரை சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் ரவிச்சந்திரன். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் அதிக புகழ் பெற்ற இவர் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். மசாலா கம்பெனி ஓனராக இருந்த ரவிச்சந்திரன் தான் நடிகரான கதையை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் தனது நடிப்பிற்காக முதல் விருதினை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ரவிச்சந்திரன் அந்த பேட்டியில், 'என்னுடைய சொந்த ஊர் கும்பகோணம். நடிப்பிற்கும் எங்கள் குடும்பத்திற்கும் சம்மந்தமே கிடையாது. ஊரில் மசாலா கம்பெனி ஒன்று நடத்தி வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டு ஊருக்குள் மிகப்பெரிய அவமானம் ஆகிவிட்டது. வேலை தேடி தான் சென்னை வந்தேன். அப்போது தான் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தோற்றுப்போன பிசினஸ்மேனாக எந்த ஊரில் அவமானப்பட்டேனோ அதே ஊர் என்னை நடிகராக வரவேற்றது. அதானலேயே நடிப்பை விட்டுவிடக் கூடாது என உறுதியாக இருந்தேன். எனக்கு சரவணன் மீனாட்சி தொடர் நல்லதொரு அங்கீகாரத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிக பெயர் புகழையும் கொடுத்தது. மற்ற சேனல்களில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனாலும் விருதுகள் கிடைக்காதது வருத்தமாக இருந்தது. அதன்பிறகு ஒரு விருது விழாவில் என் பெயர் நாமினேட் ஆனதையே நான் பெரிய மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டேன். இப்போது எனக்கு மருமகள் தொடருக்காக விருது கிடைத்திருப்பதால் அளவில்லாத சந்தோஷத்தில் இருக்கிறேன். இது என் நடிப்புக்கு கிடைத்த முதல் விருது' என தனது மகிழ்ச்சியை அதில் பகிர்ந்துள்ளார்.