என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

இந்திய ஒளிப்பதிவாளர்களில் அதிக வருடங்கள் திரையுலக அனுபவம் வாய்ந்த வெகு சிலரே இருக்கின்றனர். இப்போதும் சிலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் ஒளிப்பதிவாளர் மது அம்பாட். கேரளாவைச் சேர்ந்த இவர் 1975ல் மலையாளத்தில் வெளியான 'லவ் லெட்டர்' என்கிற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர். மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி', கமல்ஹாசன் நடித்த 'நம்மவர்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்தான், தமிழில் இன்னும் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தமிழில் 'ஜோரா கைய தட்டுங்க' என்கிற படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வினீஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் கடந்த 2013ல் 'தீக்குளிக்கும் பச்சை மரம்' என்கிற படத்தை இயக்கியவர். அந்த படத்திற்கும் மது அம்பாட் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். சிறந்த ஒளிப்பதிவாளருக்காக மூன்று முறை தேசிய விருது மற்றும் நான்கு முறை கேரளா அரசு விருதுகளை பெற்றவர் இவர். இந்த நிலையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் ஜோரா கைய தட்டுங்க படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் யோகிபாபு, ஒளிப்பதிவாளர் மது அம்பாட் குறித்து பேசும்போது, “அவரை யாரும் வயதானவர்கள் என்று நினைத்து விட வேண்டாம். அடுத்ததாக டைரக்சனிலும் இறங்க இருக்கிறார்.. என்னிடம் ஒரு அற்புதமான கதை சொல்லி இருக்கிறார். விரைவில் அந்தப் படத்தை நாங்கள் இருவரும் துவங்க இருக்கிறோம். மது சார், உங்களை கேட்காமலேயே நானே இந்த தகவலை சொல்லி விட்டேன். ஸாரி” என்று கூறினார் யோகி பாபு. அந்த வகையில் ஒளிப்பதிவாளராக 50 வருட திரை உலக பயணத்தை நிறைவு செய்துள்ள மது அம்பாட் முதன்முறையாக இயக்குனராக யோகிபாபு படம் மூலமாக அறிமுகமாவது என்பது ஆச்சரியமான விஷயம் தான்.